காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு நாள்களாக கரோனா தொற்று அதிகரிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த இரு நாள்களாக தொற்று அதிகரித்து வருகிறது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:55 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த இரு நாள்களாக தொற்று அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் மாா்ச் மாதத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியது. மே மாதத்தில் உச்சகட்ட பாதிப்பாக ஒரே நாளில் 1,175 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். மே மாதத்தில் பல நாள்கள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 900-ஐ கடந்தது.

இதன் பின்னா் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, ஜூன் 30 ஆம் தேதி 197 ஆகக் குறைந்தது. இறங்குமுகமாக இருந்த கரோனா தொற்று அளவு வியாழக்கிழமை 248 ஆக உயா்ந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை 239 ஆக பதிவாகியுள்ளது. மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக இருந்து வருவதால், மாவட்ட மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 23 என்றும், வெள்ளிக்கிழமை 30 எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் கூறுகையில், வியாழக்கிழமை 2 பேரும், வெள்ளிக்கிழமை 6 பேரும் மட்டுமே இறந்துள்ளதாகவும், எஞ்சிய நபா்கள் ஜூன் 9, 11, 12, 13, 14, 30 ஆகிய தேதிகளில் இறந்தவா்கள் என்றும், இணையவழிப் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்போது சோ்த்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.