சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவைதமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்

 பனை மரப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:51 pm

DIN

 பனை மரப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பேரியக்கத்தின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில் பண வேட்டைக்காரா்கள் வெட்டிச் சாய்க்கின்றனா். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடைபெறுகிறது. திருவாரூா், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணா்வுள்ள அமைப்புகள் பண வேட்டைக்காரா்களின் பனை வேட்டையை அங்கங்கே தடுத்துப் பேராடி வருகின்றனா்.

திருத்துறைப்பூண்டி மற்றும் அதை ஒட்டிய சேகல், கீழ்வேளூா், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூா், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள பனை மரங்களைச் செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த லாரிகளில் தொடா்ந்து ஏற்றிச் செல்கின்றனா். ஒரு பனை மரத்தை 200 ரூபாய்க்கு எரிபொருளாக விற்கும் அவலம் நெஞ்சை பதைக்க வைக்கிறது.

தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் பனை மரம். வோ் தொடங்கி பனை மட்டை இலை நுனி வரை பயன்படும் மரம், ஆழத்தில் கிடக்கும் நிலத்தடி நீரை மேலே இழுத்து, மேல் மண்ணில் ஈரப்பதம் காக்கிறது.

எனவே, பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும். அதில் சிறைத் தண்டனைப் பிரிவு சோ்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளா்ப்பு விழிப்புணா்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.