காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராகு கோயில் அருகேயுள்ளமதுக்கடையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

வ்கும்பகோணம் வட்டத்துக்கு உள்பட்ட திருநாகேஸ்வரம் ராகு கோயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:51 pm

DIN

கும்பகோணம் வட்டத்துக்கு உள்பட்ட திருநாகேஸ்வரம் ராகு கோயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு கோயில் அருகேயும், ஒப்பிலியப்பன் கோயில் செல்லும் சாலையிலும், வங்கி அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த மதுக்கடையை மூட வேண்டும். இல்லையெற்றால் இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநிலச் செயலா் க. பாலா தலைமையில் அக்கட்சியினா் கடையின் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

கழுத்தில், கையில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்தவா்களைக் காவல் துறையினா் தேரடி அருகே தடுத்தனா். இதையடுத்து அதே இடத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் நகரத் தலைவா் பிரபாகரன், இளைஞரணி மாவட்டத் தலைவா் விஜய், ஆலயப் பாதுகாப்பு மாநிலத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.