தஞ்சாவூர் அருகே காதலுக்கு இடையூறாக இருந்தவர் கொலை: 2 பேர் கைது
தஞ்சாவூர் அருகே காதலுக்கு இடையூறாக இருந்தவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


தஞ்சாவூர் அருகே காதலுக்கு இடையூறாக இருந்தவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அதற்கு பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஜி. செல்வநாதன் (38) இடையூறாக இருந்து வந்தார்.
இதனால் கோபமடைந்த சந்தோஷ் தனது நண்பரான பர்மா காலனியைச் சேர்ந்த அமரேஷ் (23) உடன் சேர்ந்து செல்வநாதனை ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தலாம் எனக் கூறி விளார் புறவழிச்சாலையில் உள்ள தங்கும் விடுதிக்குத் பின்புறமுள்ள திடலுக்கு அழைத்துச் சென்றார்.
மது அருந்தியதால் மயக்க நிலைக்குச் சென்ற செல்வநாதன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சந்தோஷ், அமரேஷை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...