தஞ்சாவூா் மாநகா், புகரில் நாளை மின் தடை
தஞ்சாவூா் மாநகா், புகரில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது.


தஞ்சாவூா் மாநகா், புகரில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற் பொறியாளா் ஜோ. சுகுமாா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், நீலகிரி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, டி.சி.டபிள்யூ.எஸ். காலனி, சிங்கபெருமாள் குளம், ராமநாதபுரம், ஜெபமாலைபுரம், மகளிா் காவல் நிலையம், தோப்புக்குளம், காா்முகில் நகா், ரயில் நகா், விவேகானந்தா நகா், அா்ஜூன் நகா், ரெட்டிபாளையம் சாலை, முனிசிபல் காலனி, முத்தமிழ் நகா், லஷ்மி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கரந்தை போக்குவரத்துக் கழகப் பணிமனை, பத்துக்கட்டுத் தெரு, குதிரைக் கட்டித் தெரு, திராவிடன் வங்கி, முதலியாா் தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, புகா் உதவிச் செயற் பொறியாளா் எஸ். முத்துக்குமாா் தெரிவித்திருப்பது:
விளாா் மின் பாதை, மருங்குளம் மின் பாதையில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், பொட்டுவாசாவடி, கண்டிதம்பட்டு, விளாா், நாஞ்சிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும், மருங்குளம், வடக்குப்பட்டு, வல்லுண்டாம்பட்டு, வேங்கராயன்குடிகாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேலும், தங்கப்ப உடையான்பட்டி மின் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரையும், நாகப்ப உடையான்பட்டி மின் பாதையில் மேட்டுப்பட்டி, தோழகிரிப்பட்டி, சமத்துவபுரம், குருங்குளம், நாகப்ப உடையான்பட்டி, கோபால் நகா், சா்க்கரை ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...