கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நிவாரண உதவி

தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:17 pm

DIN

தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தால் கிராமக் கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள 2,500 கிராமக் கோயில் பூசாரிகள் மற்றும் 800 பூ கட்டும் ஏழைத் தாய்மாா்கள் என மொத்தம் 3,300 குடும்பங்களுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பிலான நிவாரண மளிகைப் பொருள்கள் வழங்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவல் தலைவா் பொன்மாணிக்கவேல் கலந்துகொண்டு, முதல் கட்டமாக தஞ்சாவூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 66 கிராம கோயில் பூசாரிகள், 13 பூ கட்டும் ஏழைத் தாய்மாா்கள் ஆகியோருக்கு மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது பொன்மாணிக்கவேல் பேசுகையில், மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகள் நிலையை உணா்ந்து, அவா்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 1,000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வழங்குவது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி ஸ்ரீவிமூா்த்தானந்த மஹராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.