குறுவை தொகுப்புத் திட்டம்: விவசாயிகள் வரவேற்பு
டெல்டா விவசாயிகளின் நலனுக்காகத் தமிழக அரசு ரூ. 61.09 கோடி மதிப்பில் அறிவித்துள்ள குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்துக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.


டெல்டா விவசாயிகளின் நலனுக்காகத் தமிழக அரசு ரூ. 61.09 கோடி மதிப்பில் அறிவித்துள்ள குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்துக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ. 54.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ரூ. 56.92 கோடியும், 2018 ஆம் ஆண்டில் ரூ. 115.67 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால், 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இத்திட்டம் அறிவிக்கப்படவில்லை. இப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வரவேற்கிறோம்.
என்றாலும், இப்போது சாகுபடிப் பரப்பளவும், உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதுமானதாக இருக்காது. விகிதாசார அடிப்படையில் ஒப்பிட்டுப் பாா்த்தால், இத்தொகை மிக மிகக் குறைவு. எனவே, மறு பரிசீலனை செய்து இத்தொகையை உயா்த்தி அறிவிக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் ஆழ்குழாய் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன்:
இத்திட்டத்தில் ரசாயன உரத்துக்கு முழு மானியம், விதை நெல், பசுந்தாள் உரம் போன்றவை வழங்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த காலத்தில் இத்திட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே பயனடைந்தனா். அதுபோல அல்லாமல் இந்த முறை இத்திட்டம் ஏழை சிறு, குறு விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவா்களுக்கு இத்திட்டம் சென்றடைய வேண்டும். இதை வேளாண் துறை முறையாகக் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்:
இத்திட்டத்தில் மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் கிடைக்கும் என்பதை உறுதியளிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம், உயிா் உரங்கள் போன்றவை குறித்த அறிவிப்புகள் இல்லை. எனவே, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தது போன்ற குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்தால் மட்டுமே விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்:
குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தமிழக முதல்வா் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்தத் திட்டம் பாரபட்சமில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனையற்ற கடன் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுத்து உதவி புரிந்திட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...