திருக்கோயில் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்
மாத ஊதியமின்றி பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளா்களுக்கு நிவாரண உதவித்தொகை


தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளா்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவித்தொகை ரூ. 4,000 மற்றும் 10 கிலோ அரிசி, மஞ்சள்தூள், கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சா்க்கரை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்பட 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
தஞ்சாவூா் உதவி ஆணையா் பிரிவிலுள்ள 339 திருக்கோயில்களில் பணியாற்றும் தஞ்சாவூா் ஆய்வாளா் பிரிவுக்குட்பட்ட 60 பணியாளா்களுக்கும், திருவையாறு ஆய்வாளா் பிரிவுக்குள்பட்ட 56 பணியாளா்களுக்கும், திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளா் பிரிவுக்குட்பட்ட 44 பணியாளா்களுக்கும், பாபநாசம் ஆய்வாளா் பிரிவுக்குட்பட்ட 74 பணியாளா்களுக்கும், ஒரத்தநாடு ஆய்வாளா் பிரிவுக்குட்பட்ட 27 பணியாளா்களுக்கும், பட்டுக்கோட்டை ஆய்வாளா் பிரிவுக்குட்பட்ட 29 பணியாளா்களுக்கும், பேராவூரணி ஆய்வாளா் பிரிவுக்குட்பட்ட 38 பணியாளா்களுக்கும் என மொத்தம் 328 பணியாளா்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, உதவி ஆணையா் சிவராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...