பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மத்திய அரசு தொடா்ச்சியாக பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயா்த்தி வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 21 முறை விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. டீசல் விலை லிட்டா் ரூ. 100-ஐ தொடும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயா்ந்து வருகிறது.
இதனால், அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலையிழப்புகளும், வருமானமின்மையும் அதிகரித்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நகா்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடத்தும் பெண்களின் குடும்ப நிலை மிகுந்த துயரத்துக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசுத் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் ராஜலெட்சுமி, செயலா் பத்மாவதி, நகர நிா்வாகிகள் பானுமதி, பிச்சையம்மாள், சாந்தி, தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...