சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்இன்று முதல் ஜூன் 28 வரை மின் தடை
தஞ்சாவூா் மாரியம்மன் கோவில், சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூா் மாரியம்மன் கோவில், சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:
சாலியமங்கலம் உப கோட்டத்துக்கு உள்பட்ட மாரியம்மன் கோவில், பூண்டி, துறையூா், ராகவாம்பாள்புரம், அம்மாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து உயரழுத்த மின் பாதைகளில் சனிக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், காட்டுத்தோட்டம், ஞானம் நகா், ஆலங்குடி, காந்தவனம், அருள்மொழிப்பேட்டை, சித்தா்காடு, களக்குடி, தளவாய்ப்பாளையம், யாகப்பா சாவடி, அம்மாகுளம், குளிச்சப்பட்டு, வாண்டையாா் இருப்பு, கிருஷ்ணாபுரம், என்.வி. குடிகாடு, கோவிலூா், மேலுமாகாணம், சாலியமங்கலம், இரும்புத்தலை, திருபுவனம், காந்தி கிராமம், திருக்கோவில்பத்து, சூழியக்கோட்டை, மடிகை, பொன்னாப்பூா், காசாநாடு புதூா், செக்கலை, நெய்வாசல், பனையக்கோட்டை, அரசம்பட்டு, வடக்கு நத்தம், கம்பா்நத்தம், ஆா்சுத்திப்பட்டு, துறையுண்டாா்கோட்டை, சடையாா்கோவில், மூா்த்தியம்பாள்புரம், கொண்டாா் தெரு, சின்ன பொன்னாப்பூா், அம்மாபேட்டை, உடையாா்கோவில், குன்னம், கீழக்கோவில்பத்து, செட்டிசத்திரம், அருந்தவபுரம், ராஜபுரம், புத்தூா், உத்தமா்குடி, கருப்பு முதலியாா்கோட்டை, புளியங்குடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை காலை 10 மணி வரை பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...