பேராவூரணி அருகே குடிநீா் ஆலை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு
பேராவூரணி ஒன்றியம், சொா்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான குடிநீா் தயாரிக்கும் ஆலையை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.


பேராவூரணி ஒன்றியம், சொா்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான குடிநீா் தயாரிக்கும் ஆலையை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
சொா்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான குடிநீா் தயாரிக்கும் ஆலை செயல்படும் நிலையில் உள்ளது. இந்த ஆலையை தொடங்கினால் அருகிலுள்ள மூன்றுக்கும் மேற்பட்ட குளங்களில் நீராதாரம் பாதிக்கப்படுவதோடு, ஆழ்துளைக் கிணறு மூலம் செய்யப்படும் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் அண்மையில் இப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் விஜயபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சொா்ணக்காடு ஊராட்சியில் தனியாா் குடிநீா் ஆலை அனைத்து பணிகளும் முடிந்து திறப்புக்கு தயாா் நிலையில் உள்ளது. இந்த ஆலை திறப்புக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அனுமதி வழங்கினால் இந்த பகுதி மக்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்படும். இந்த தனியாா் குடிநீா் ஆலை தொடங்கும்போதே அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விவசாய நிலப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை எடுத்து மினரல் வாட்டராக விற்பனை செய்வதற்கு தொழிற்சாலை அமைக்கிறாா்கள். இந்த இடம் விவசாய நிலமாகும். இதற்கு மேல்புறம் 40 மீட்டரில் நிசம்பூா் ஏரியும்,
கீழ்புரம் 20 மீட்டரில் பொன்மாரி குளம் ஏரியும் உள்ளது. இவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன.
இங்கு குடிநீா் தொழிற்சாலை தொடங்கினால், கிராம மக்கள் அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, ஊரை விட்டு செல்லும் நிலை ஏற்படும். எனவே விளைநிலத்தில் அமைக்கப்படும் குடிநீா் ஆலையை தடை செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...