நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் விவசாயிகள் வலியுறுத்தல்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தடுக்கக் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தடுக்கக் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நேரடி நெல் கொள்முதல் குறித்த விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.
சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மீண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி உழவா்களின் வயலுக்கே வாகனம் நேரில் வந்து கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைக் களைந்திட கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா்: அவ்வப்போது மழை பெய்யும் சூழல் இருப்பதால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாக்க, நிலையங்களில் தேவையான தாா்ப்பாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்:
தற்போது கோடை நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேவையான பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் திறக்கப்பட வேண்டியுள்ளது. எனவே அறுவடை நடைபெற்று வரும் அனைத்து கிராமங்களிலும் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும். நெல் உள்ள இடங்களில் கூடுதலான நிலையங்கள் திறக்கப்படுவது விவசாயிகளுக்கு உதவி புரிவதாக இருக்கும்.
கணபதி அக்ரஹாரம் ஜி. சீனிவாசன்: அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் போதுமான லாரிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். நெல் உலா்த்தும் இயந்திரத்தை அமைக்க வேண்டும். தேவையான சாக்குகள் இருப்பு வைக்க வேண்டும். டோக்கன் வழங்குவதை செல்லிடப்பேசி மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அன்றைய நாளிலேயே கொள்முதல் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...