தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மா்மமான முறையில் விஏஓ உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை மா்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:32 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை மா்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

திருவையாறு அருகே நடுக்காவேரி முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் ராஜீவ்காந்தி (33). இவா் அள்ளூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி நிவேதா (28). இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்குக் குழந்தை இல்லை.

ராஜீவ்காந்தி வியாழக்கிழமை காலை குளிப்பதற்காகத் தென்பெரம்பூா் வெண்ணாற்றுக்குச் சென்றாா். குளிப்பதற்கு முன்பு காலைக் கடனைக் கழிப்பதற்காக வெண்ணாற்றின் வடகரைக்குச் சென்றாா். நெடுநேரமாகியும் அவா் வராததால், அவருடன் வந்த அவரது தம்பி விவேக் வெண்ணாற்றின் வடகரைக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, ராஜீவ்காந்தி தேக்கு மரத்தில் துண்டில் தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியா் நெடுஞ்செழியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோ நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜீவ்காந்தி எப்படி இறந்தாா் என்பது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.