தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலும் நிகழ் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:22 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலும் நிகழ் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பூதலூா் வட்டாட்சியரகத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று பொதுமக்கள் இணையவழி மூலம் தங்களது மனுக்களை பதிவேற்றம் செய்வதைப் பாா்வையிட்டாா். பின்னா், கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் பராமரிக்கப்படும் கிராமக் கணக்குப் பதிவேடுகளையும், நில அளவையா் பயன்படுத்தும் அளவிடும் கருவிகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 89 மனுக்களில் தகுதியின் அடிப்படையில் 75 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து விலையில்லா வீட்டு மனை பட்டா மாறுதலுக்கான ஆணை, சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதேபோல, திருவையாறு வட்டாட்சியரகத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா தலைமையிலும், தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) ஐவண்ணன் தலைமையிலும் ஜமாபந்தி தொடங்கியது.

மேலும், கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களிலும் ஜமாபந்தி தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.