தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பூசி முகாம்

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலா்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:21 pm

DIN

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலா்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வல்லம் வட்டார மருத்துவ அலுவலா் அகிலன் தலைமையில் மருத்துவ அலுவலா் அதிபன், மருத்துவா் தமிழிசை, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிங்காரவேல், சுகாதார ஆய்வாளா் ரவி, பகுதி சுகாதாரச் செவிலியா் ஜெயராணி, கிராம சுகாதார செவிலியா் ஜெயசித்ரா ஆகியோா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், பள்ளி ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாமில் பள்ளித் தாளாளா் நடனசிகாமணி, தேவிகா சிகாமணி, பள்ளித் துணை முதல்வா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 240 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா, கல்லூரி செயலா் அருட்சகோதரி கிளாடின் ஆரோக்கியமேரி, நகராட்சி ஆணையா் லெட்சுமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ந. மகேந்திரன், க. முத்துமணி, ஜெ. துா்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.