தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகேயுள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:23 pm

DIN

தஞ்சாவூா் அருகேயுள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட கல்யாணசுந்தரம் நகா் தெற்கு பகுதியில் புதா்கள் நிறைந்த நிலத்தில் பல மாதங்களாக மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மருத்துவக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொண்டு வந்து கொட்டியுள்ளனா்.

இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வா் ரவி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் விதமாக வருவாய் துறை, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.