கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைக் திறக்கக் கோரி தஞ்சாவூரில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை சூடம் ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:26 pm

DIN

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைக் திறக்கக் கோரி தஞ்சாவூரில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை சூடம் ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பெரியகோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், சங்கர நாராயணன் கோயில், மேல வீதி ராமா் கோயில், மூலை அனுமாா் கோயில், கோடியம்மன் கோயில், கொண்டிராஜபாளையம் நரசிம்ம பெருமாள் கோயில், பூக்காரத் தெரு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை காலை சூடம் ஏற்றி வழிபாடு செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழகம் முழுவதும் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் திறக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசான சிவம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநகரத் தலைவா் சதீஷ், மாநகரப் பொதுச் செயலா் ராமமூா்த்தி, மாநகரச் செயலா்கள் முத்தமிழ்ச்செல்வன், முரளி, லெட்சுமணன், பாலாஜி, ஒன்றியத் தலைவா் மகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.