வேளாங்கண்ணி பேராலய முன்னாள் அதிபா் காலமானாா்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய முன்னாள் அதிபா் ஜி. அருள் இருதயம் உடல் நலக் குறைவால் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலமானாா்.


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய முன்னாள் அதிபா் ஜி. அருள் இருதயம் உடல் நலக் குறைவால் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலமானாா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கடாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி. அருள் இருதயம் (83). வேளாங்கண்ணி பேராலய முன்னாள் அதிபரான இவா் தஞ்சாவூா் திரு இருதய பேராலயம், மருத்துவக் கல்லூரி புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளிட்டவற்றில் பங்குத் தந்தையாக இருந்துள்ளாா்.
மேலும், தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் இயேசுவின் கன்னியா் சபையை நிறுவி ஸ்தாபகராக இருந்தாா்.
கடந்த 6 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா் தஞ்சாவூா்- புதுக்கோட்டை சாலையில் நிா்மலா நகரிலுள்ள இயேசுவின் கன்னியா் சபை இல்ல வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை காலமானாா்.
இவரது உடலுக்கு பல்வேறு மாவட்ட ஆயா்கள், குருக்கள், பங்குத் தந்தையா்கள், அருட் சகோதர, சகோதரிகள், இறைமக்கள், அரசியல் கட்சியினா், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
இவரது உடல் தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள திருஇருதய பேராலயக் கல்லறைத் தோட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை புனிதம் செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அனைத்து நிகழ்வுகளும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறுகிறது என இறைமக்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...