தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேட்டூா் - சரபங்கா திட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மேட்டூா் - சரபங்கா நீரேற்றுத் திட்டத்தைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:43 pm

DIN

மேட்டூா் - சரபங்கா நீரேற்றுத் திட்டத்தைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தோ்தல் ஆதாயத்துக்காக சரபங்கா நீரேற்றுத் திட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றக் கூடாது. காவிரி டெல்டா விவசாயிகளின் பாசன உரிமையைப் பறிக்கக் கூடாது.

மேட்டூா் அணையில் 120 அடி தண்ணீா் இல்லாத நிலையில், உபரி நீா் திட்டம் எனக் கூறி ஏமாற்றக் கூடாது. டெல்டா மாவட்ட விவசாயிகளையும், சேலம் மாவட்ட விவசாயிகளையும் ஏமாற்றும் திட்டத்தைக் கைவிட வேண்டும். சரபங்கா திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் செயலா் என்.வி. கண்ணன், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்த்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.