ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:41 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கரம்பயம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா், மேலும் கூறியது:

மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,886 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், அங்கு அடிப்படை வசதிகள் இருப்பதையும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களான தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்துத் துறை அலுவலா்கள், காவல்துறையினா் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக தெரிய வந்தால், ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறை எண் 1950-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா், தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னு கிருஷ்ணன், வட்டாட்சியா்கள் பட்டுக்கோட்டை தரணிகா, பேராவூரணி விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.