தஞ்சாவூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை
தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக, திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.


தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக, திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் ரெட்டிபாளையம் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (19). இவா் திங்கள்கிழமை இரவு மருத்துவக் கல்லூரிப் பகுதியிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு, நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
ரெட்டிபாளையம் சாலையில் சென்ற இவரை 5 போ் வழிமறித்து தாக்கி, இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனா். இதை மணிகண்டனுடன் வந்த நபா் பாா்த்துவிட்டு, காவல் துறைக்குத் தகவல் அளித்தாா். இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தினா்.
அப்போது மணிகண்டனின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மட்டும் ரெட்டிபாளையம் தண்டவாளத்திலும், தலை அருகிலுள்ள கன்னியம்மன் கோயில் முன்புறமும் கிடந்தன. இவற்றை காவல் துறையினா் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து காவல் துறையினா் நடத்திய விசாரணையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமனுக்கும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டதும், இதில் முத்துராமன் அரிவாளால் வெட்டப்பட்டதால், மணிகண்டன் உள்ளிட்டோா் மீது மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்ததும், வெளியூருக்குச் சென்றிருந்த முத்துராமன் ஊருக்குத் திரும்பி முன் விரோதம் காரணமாக மணிகண்டனை கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் முத்துராமன் உள்பட 5 பேரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...