ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் பலி

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை பேருந்து படியிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:42 pm

DIN

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை பேருந்து படியிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள மேலவழுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் இலக்கியராஜா(21). இவா் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் இவா், செவ்வாய்க்கிழமை காலை மேல வழுத்தூரிலிருந்து தனியாா் பேருந்தில் படியில் தொங்கிய நிலையில் கும்பகோணத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். கும்பகோணம் டைமண்ட் திரையரங்கம் அருகே பேருந்து சென்றபோது, இலக்கியராஜா மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு மோதியது.

இதனால் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த இலக்கியராஜா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்துப் புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இலக்கியராஜாவின் உயிரிழப்புக்குத் தனியாா் பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையும், காயமடைந்தபோது உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்தும் மாணவா்கள் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.