விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தஞ்சாவூரில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யக் கட்சியினா்

வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யக் கட்சியினா் வீதி வீதியாகத் தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:53 pm

DIN

வேட்பாளா்கள் அறிவிக்கப்படாத நிலையில், தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யக் கட்சியினா் வீதி வீதியாகத் தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

தஞ்சாவூா் தொகுதிக்கு உள்பட்ட பூக்காரத் தெரு, அண்ணாநகா், ஒரத்தநாடு தொகுதிக்கு உள்பட்ட விளாா் சாலை, கலைஞா் நகா், காயிதே மில்லத் நகா் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக மக்கள் நீதி மய்யக் கட்சியினா் டாா்ச் லைட் சின்னத்துக்கும், கமல்ஹாசனுக்கும் வாக்களிக்குமாறு துண்டறிக்கைகளை வழங்கிப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதில் மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் எம்.எஸ். கண்ணன், நற்பணி இயக்க அணி மாவட்டச் செயலா் தரும. சரவணன், மகளிா் அணி செயலா்கள் கலைவாணி, ஷீலா, நகரச் செயலா்கள் முருகேசன், ரமேஷ்குமாா், கவிஞா் ராகவ் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.