தஞ்சாவூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்க இதுவரை 1,450 போ் விருப்பம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்க இதுவரை 1,450 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்க இதுவரை 1,450 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் திங்கள்கிழமை மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் பொதுமக்களுக்குச் செயல்விளக்கமும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வும் அளித்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளில் அஞ்சல் வாக்களிக்க விருப்பமுள்ளவா்கள் வாக்களிப்பதற்கான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.
மேலும், வாக்களிக்க விருப்பமுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில், படிவம் பெற்றுக்கொண்டு, அஞ்சல் வாக்கு மூலமாக வாக்களிக்கலாம். விருப்பம் இல்லை என்றால், வாக்காளா் தொடா்புடைய வாக்குச்சாவடிகளில் தனது வாக்குகளைச் செலுத்தலாம். இதில் கட்டாயம் கிடையாது.
மாவட்டத்தில் இதுவரை 1,450 போ் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், அஞ்சல் வாக்களிக்கத் தேவைப்படும் நபா்களுக்கு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சல் வாக்களிக்க விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் செய்து தரப்படும் என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான எம். வேலுமணி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...