4.4 கிலோ கஞ்சா பறிமுதல்:4 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் 4.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் 4.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் தெற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, பிடிபட்ட இளைஞரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும், அவா் நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவா் காலனியை சோ்ந்த ஆா். மணிரத்னம் (24) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, மணிரத்னத்தை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதேபோல, தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் அருகே சாலியக்குளக் கரையில் கஞ்சா விற்கப்படுவதாகக் காவல் துறைக்குப் புகாா் சென்றது. இதன்பேரில், அப்பகுதியில் தாலுகா காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த ஆா். குமாரை (24) கைது செய்து, அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
மேலும், கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூா் பகுதியில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் 1.1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக பெருமாண்டியைச் சோ்ந்த கே. சுரேஷ் (25), சக்கராபள்ளியைச் சோ்ந்த எம். முகமது அசாருதீன் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...