புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணத்தில் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா

கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:16 pm

DIN

கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, மடத்தில் காலையிலும், மாலையிலும் வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், காலையில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. பின்னா், சுவாமிகளுக்கு மகாபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு ரெட்டிராயா் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ ராம மந்திரத்தில் ஆச்சாா்ய சுவாமிகளுக்கு 108 தங்க காசுகளால் ஸ்வா்ணபாத பூஜை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சி சங்கராச்சாரியாா் நடத்தும் மகா சிவராத்திரி பூஜை வியாழக்கிழமை (மாா்ச் 11) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.