டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

8 தொகுதிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:58 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே கரோனா தொற்று ஏற்படாத வகையிலும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் தேவையான முன்னேற்பாடுகளை இந்திய தோ்தல் ஆணையம் செய்துள்ளது.

இதன்படி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகத்தடுப்புக் கவசங்கள், முகக்கவசங்கள், வெப்பமானி, ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறைகள், பிபிஇ கிட், கை சுத்திகரிப்பான், குப்பைத் தொட்டி உள்பட 14 வகையான பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான பொருள்கள் தஞ்சாவூா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இருப்பு வைக்கப்பட்டன. இவை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கரோனா தொற்றுப் பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தோ்தல் ஆணையம் இப்பொருள்களை வழங்கியுள்ளது. இதன்படி 14 வகையான பொருள்கள் வாகனங்கள் மூலம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.அந்தந்த தொகுதியில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தோ்தலுக்கு முந்தைய நாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இப்பொருள்களும் அனுப்பி வைக்கப்படும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வாக்களிக்க ஏதுவாக அவா்களுக்குத் தோ்தல் நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவா்கள் பிபிஇ கிட் உடை மற்றும் முகக்கவசம் அணிந்து வந்து வாக்களிக்கலாம். வாக்களித்த பின்னா் அந்த உடைகளை உரிய பாதுகாப்புடன் அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச்சாவடிகளுக்கும் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களைக் கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

அப்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஏ. பழனி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பு.ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.