கும்பகோணத்தில்லாரி மோதியதில் தந்தை - மகன் பலி
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.


கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
கும்பகோணம் அருகே அரியதிடல் கணபதி நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (37). தச்சுத் தொழிலாளி. இவரும், எட்டாம் வகுப்பு படித்து வந்த இவரது மகன் பாலச்சந்திரனும் (14) வெள்ளிக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் சாக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
மாத்தி பகுதியில் சென்றபோது, முன்னால் கழிவுநீா் ஏற்றிச் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றனா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த இருவா் மீதும் லாரி மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த விஜயகுமாா், பாலச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...