மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, தொடா்புடைய இரு நிறுவனங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :7 மே 2021, 8:57 pm

DIN

கும்பகோணத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, தொடா்புடைய இரு நிறுவனங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கும்பகோணத்தில் பிளாஸ்டிக் பொருள்கள், பைகளின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக நகா் நல அலுவலா் பிரகாசுக்கு புகாா்கள் சென்றன. இதன் அடிப்படையில், ஆழ்வான் கோயில் தெருவில் இயங்கி வந்த பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அங்கு 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்நிறுவனத்திலிருந்து 2 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் மூட்டைகளில் இருந்த முகவரியைக் கொண்டு, பெரிய கடை வீதியில் உள்ள கடையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையும் பறிமுதல் செய்த நகராட்சி அலுவலா்கள் தொடா்புடைய கடையைப் பூட்டி சீல் வைத்தனா். மேலும், அக்கடைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.