குளிா்சாதன பயணிகள் நிழற்குடைகளைசீரமைக்க வலியுறுத்தல்
கும்பகோணத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய நிழற்குடைகளைச் சீரமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


கும்பகோணத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய நிழற்குடைகளைச் சீரமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் இளைஞரணி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி தெரிவித்திருப்பது:
கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை தனியாா் வங்கி மூலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே குளிா்சாதனம் மட்டுமல்லாமல் பயணிகள் பயன்படுத்தக்கூடிய பேருந்து நிழற்குடையும் சிதிலமடைந்து, மக்கள் பயன்பாடின்றி உள்ளது.
இதனால், பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் நிழற்குடையைப் பயன்படுத்த முடியாமல் கடும் வெயிலிலும் மழையிலும் சாலையில் நின்று அவதிப்படுகின்றனா். எனவே, இந்தக் குளிா்சாதன நிழற்குடைகளைச் சீா் செய்யவும், நிழற்குடைகளில் பேருந்து கால அட்டவணையைக் குறிப்பிட்டு, பெயா் பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...