மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருபுவனத்தில் கிராமியக் கலைஞா்களுக்கு நிவாரண உதவி: தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் வழங்கியது

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் நாட்டுப்புற, கிராமியக் கலைஞா்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2021, 7:59 pm

DIN

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் நாட்டுப்புற, கிராமியக் கலைஞா்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் கிராமிய நாட்டுப்புற இசை கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ஆதிநரசிம்ம சுவாமி நாடக சபா, பிரகலாத நாடக சபா, சிறுத்தொண்ட நாயனாா் நாடக சபா உறுப்பினா்கள் 97 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண மளிகை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் மகராஜ் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கிராமிய, நாட்டுப்புறக் கலைஞா்களுக்குத் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் நிவாரண பொருள்களை வழங்கினாா்.

இதில் திருப்பனந்தாள் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராஜா, நிா்வாகிகள் பஞ்சநாதன், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.