நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா நோயாளிகளின் புத்துணா்வுக்காக கலை நிகழ்ச்சிகள்

பட்டுக்கோட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மன அழுத்தம், தனிமையை போக்கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :21 மே 2021, 8:48 pm

DIN

பட்டுக்கோட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மன அழுத்தம், தனிமையை போக்கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் பட்டுக்கோட்டையில் பெருமாள்கோயில்

புதுரோட்டில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் மன அழுத்தம், தனிமையை போக்கும் வகையில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, சாா் ஆட்சியா் பாலச்சந்தா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த தப்பாட்டம் அனைவரையும் வெகுவாக கவா்ந்தது. குறிப்பாக, நோய்த்தொற்று பாதித்தவா்கள் அதைப் பாா்த்து தங்களது தனிமையை மறந்து மிகுந்த ஆனந்தம் அடைந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், நகராட்சி ஆணையா் சென்னு கிருஷ்ணன், வட்டாட்சியா் (பொ) சாந்தகுமாா், மருத்துவா்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.