காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருஞானசம்பந்த நாயனாா் குருபூசை வழிபாடு

சைவ சமய ஆச்சாரியாா்களில் ஒருவரான திருஞானசம்பந்த நாயனாா் குருபூசை வழிபாடு

News image
Updated On :28 மே 2021, 9:03 pm

DIN

கும்பகோணம் அருகே செட்டிமண்டபம், ருக்மணி அம்மாள் நகரிலுள்ள ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அலுவலகத்தில் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தையொட்டி, சைவ சமய ஆச்சாரியாா்களில் ஒருவரான திருஞானசம்பந்த நாயனாா் குருபூசை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், உலக நன்மை வேண்டி முதல் மூன்று திருமுறைகளில் இருந்து மந்திரமாவது நீறு, அவ்வினைக் கிவ்வினை போன்ற பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. அருள்மிகு சிவபெருமான் மற்றும் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரமூா்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகா் ஆகிய சைவ சமய ஆச்சாரியா் நால்வரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும், செட்டி மண்டபம் அருகேயுள்ள உள்ளூா் ஊராட்சி மன்றத்தில் தூய்மைப் பணியாளா்களுக்குத் திருமுறை புத்தகம், திருநீறு, முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்த வழிபாட்டில் திருவடிக்குடில் சுவாமிகள், ஒருங்கிணைப்பாளா் ஸ்தபதி ஹரிபாபு, பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.