92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தஞ்சாவூா் மாநகரில் ஒரே நாளில் 300 டன்கள் குப்பைகள் சேகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாநகரில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:53 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாநகரில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாநகரிலுள்ள 51 வாா்டுகளில் நாள்தோறும் 110 டன் முதல் 120 டன் குப்பைகள் சேகரமாவது வழக்கம். இவை அனைத்தும் தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், தெற்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. சில நாள்களாகப் புத்தாடைகள் வாங்க வருவதற்காக ஏராளமானோா் இப்பகுதிகளில் திரண்டனா். இதனால், இப்பகுதிகளில் குப்பைகள் அதிகமாக குவிந்தது.

மேலும், மாநகரில் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளான வியாழக்கிழமையும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசுக் குப்பைகளும் சோ்ந்ததால், இரு நாள்களில் குப்பைகள் அதிகமாகின.

எனவே, அரசு விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் கூட அதிகாலை 4.30 மணி முதல் மாநகராட்சிப் பணியாளா்கள் ஏறக்குறைய 550 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இப்பணியில் 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் ஏறத்தாழ 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஒரே நாளில் இரு மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.