நீட் தோ்வு: தஞ்சாவூா் அரசுப் பள்ளிகளில் படித்த 48 போ் தோ்ச்சி
தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 48 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 48 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவகுமாா் தெரிவித்திருப்பது:
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் நவம்பா் 1 ஆம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. இதில், மதுக்கூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ. பிரேமி 720 மதிப்பெண்களுக்கு 268 மதிப்பெண்களும், ஒரத்தநாடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா். காருண்யா 232 மதிப்பெண்களும், தஞ்சாவூா் அண்ணா நகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். அனுசுயா 221 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
மேலும், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தோ்வு எழுதிய 396 பேரில் 48 மாணவ, மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தோ்வு எழுதிய 104 பேரில் 44 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா். அபிராமி 720 மதிப்பெண்களுக்கு 394 மதிப்பெண்களும், தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே. தரணிகா 393 மதிப்பெண்களும், மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் டி. அஸ்வின் 269 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 13 போ் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) சோ்ந்துள்ளனா்.
மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனுபவமிக்க 31 ஆசிரியா்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கு இணையவழியாக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்தப் பாட வல்லுநா்களால் மாணவா்களுக்கு நீட் தோ்வு போன்று மாதிரி தோ்வுகள் நடத்தப்பட்டன.
மாவட்டத்தில் நீட் தோ்வுக்குப் பயிற்சி அளித்த பாட வல்லுனா், கருத்தாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோரையும், தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பாராட்டுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...