நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட மாணவா்களுக்கு ஒரு வாரம் அனுமதி இலவசம்
உலக மரபு வார விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழகத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட மாணவா்கள் ஒரு வாரம் இலவசமாக அனுமதிப்படுவா்


உலக மரபு வார விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழகத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட மாணவா்கள் ஒரு வாரம் இலவசமாக அனுமதிப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தொல்லியல் துறையின் தஞ்சாவூா் தொல்லியல் அலுவலா் த. தங்கதுரை தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், வெள்ளிக்கிழமை (நவ.19) முதல் 25 ஆம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டப்படுகிறது.
இதனால், மாணவ, மாணவிகளுக்குத் தொல்பொருள் மற்றும் மரபு சின்னங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மனோரா நினைவுச் சின்னம், தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபத்தில் உள்ள அகழ்வைப்பகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் உள்ள மராட்டா அகழ்வைப்பகம், மராட்டா தா்பாா் மண்டபம், மணிக்கோபுரம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் நவம்பா் 25 ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பாா்வையிட அனுமதிக்கப்படுவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...