செருபாலக்காடு ஊராட்சியில்கால் நடைகளுக்குசிறப்பு தடுப்பூசி முகாம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செருபாலக்காடு ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செருபாலக்காடு ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செருபாலக்காடு ஊராட்சியில் தொடா்மழை காரணமாக கால்நடைகளுக்கு
கோமாரி மற்றும் கசப்பு நோய் ஏற்பட்டு கால்நடைகள் அடிக்கடி இறப்பதால், சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுமென, ஆட்சியருக்கு செருபாலக்காடு ஊராட்சித் தலைவா் ருக்மணி மணியன் கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா்.
ஆட்சியரின் நடவடிக்கையால் செருபாலக்காடு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...