92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நிலைக் கதவு விழுந்து சிறுமி பலி

தஞ்சாவூரில் வீட்டின் நிலைக்கதவில் ஏறி விளையாடியபோது, சரிந்து விழுந்ததில் பலத்தக் காயமடைந்த சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:54 pm

DIN

தஞ்சாவூரில் வீட்டின் நிலைக்கதவில் ஏறி விளையாடியபோது, சரிந்து விழுந்ததில் பலத்தக் காயமடைந்த சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் வடக்கு வாசல் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (34). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவா்களது மகள் ப்ரீத்தி (8). ஸ்ரீதா் தனது வீட்டில் புதிதாகக் கட்டடம் கட்டி வருகிறாா். இதற்கான நிலைக்கதவை சுவரில் சாத்தி வைத்திருந்தாா். அதில், ப்ரீத்தி வியாழக்கிழமை ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது கதவு கீழே சாய்ந்து விழுந்தது. இதில், சிக்கி பலத்தக் காயமடைந்த ப்ரீத்தி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.