92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரூ. 4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 2 போ் கைது

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ஆம்னி வேனில் குட்கா கடத்தப்படுவதாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு தகவல் வந்தது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:36 pm

DIN

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ஆம்னி வேனில் குட்கா கடத்தப்படுவதாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு தகவல் வந்தது. இதன் பேரில் காவல் துறையினா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆா்.ஆா். நகா் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அந்த வழியாக வந்த மினி வேனை மறித்து சோதனையிட்டபோது, 15 மூட்டைகளில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா் மினி வேனில் வந்த ஒரத்தநாடு அருகே ஆழியவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (28), வேங்கராயன்குடிக்காடைச் சோ்ந்த திருப்பதியை (19) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.