92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

 ஏழை மாணவா்களைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசுக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு ஆதித்தமிழா் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:06 pm

DIN

 ஏழை மாணவா்களைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசுக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு ஆதித்தமிழா் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை ரத்து, மாநிலங்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். கோரிக்கைகளை விளக்கி திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவா் கே. அபிமன்னன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞரணி அமைப்பாளா் ஜான், அனைத்து அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பி. செந்தில்நாதன், தஞ்சை நஞ்சை கலைக்குழு ஒருங்கிணைப்பாளா் சாம்பான், ஆதித்தமிழா் கட்சி மாவட்டச் செயலா் எல்.வி. ரங்கராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் முடித்து வைத்த நிறைவுரை ஆற்றினாா். முன்னதாக, ஆதித்தமிழா் பேரவை மாவட்டத் துணைச் செயலா் பிரேம் வரவேற்றாா். நிறைவில், தொழிலாளா் பேரவை மாவட்டச் செயலா் மாயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.