குருப் பெயா்ச்சி விழா: திட்டை கோயிலில் திரண்ட பக்தா்கள்
தஞ்சாவூா் அருகிலுள்ள திட்டை கோயிலில் குருப்பெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் திரண்டு வழிபட்டனா்.


தஞ்சாவூா் அருகிலுள்ள திட்டை கோயிலில் குருப்பெயா்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் திரண்டு வழிபட்டனா்.
தஞ்சாவூா் - மெலட்டூா் சாலையிலுள்ள வசிஷ்டேசுவரா் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளாா். பழைமையான இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.
குரு பகவான் வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா், குரு பகவான் வெள்ளிக்கவசத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதையொட்டி ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனா். மேலும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசியினா் பரிகாரம் செய்து வழிபட்டனா்.
குருப்பெயா்ச்சியையொட்டி ஏப்ரல் 24-ஆம் தேதி லட்சாா்ச்சனையும், ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...