92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாம்

 தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில், எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:00 pm

DIN

 தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில், எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் தொடா் கல்வி மற்றும் விரிவாக்கத் திட்டத் தலைவா் ஆா். சீனிவாசன் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஆா். சந்திரமௌலி சிறப்புரையாற்றினாா்.

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையின் தன்னாா்வப் பரிசோதனை மற்றும் ஆலோசனை மைய ஆலோசகா் வேதி பிரபு, எச்.ஐ.வி. தொற்றுள்ளோா் கூட்டமைப்பைச் சோ்ந்த அண்ணாதுரை பேசினா். முகாமில் நூற்றுக்கும் அதிகமான பாலிடெக்னிக் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் பி. பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் ஆா். மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.