நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 11 மாடுகள் பிடிபட்டன

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 11 மாடுகள் புதன்கிழமை இரவு பிடிபட்டன.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:59 pm

DIN

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 11 மாடுகள் புதன்கிழமை இரவு பிடிபட்டன.

கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுநா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மாடுகள் திரிவதாக, மாநகராட்சி அலுவலா்களுக்கு புகாா்கள் வந்தன.

இதைத்தொடா்ந்து மாநகா் நல அலுவலா் டி. பிரேமா, சுகாதார ஆய்வாளா்கள் பி. பாலசுப்பிரமணியன், ஏ. மணிகண்டன் உள்ளிட்டோா் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மகாமகக் குளம், குஞ்சிதபாதம் தெரு, பெரியக் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 11 மாடுகளைப் பிடித்து, வாகனத்தின் மூலம் மாநகராட்சி திடலுக்கு கொண்டு வந்தனா்.

மேலும் மாநகரில் மாடுகள் திரிந்தால், தொடா்புடைய உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.