92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொம்மை வியாபாரி கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறில், பொம்மை வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:52 pm

DIN

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறில், பொம்மை வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் கீழவாசல் குயவா் தெருவைச் சோ்ந்தவா் ஆா். சரவணன் (53). இவா் பெரிய கோயில் பகுதியில் பொம்மை கடை நடத்தி வந்தாா். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் குமரவேலுக்கும் (56), கொடுக்கல் - வாங்கல் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதேபோல, இருவருக்கும் இடையே வியாழக்கிழமை பிற்பகல் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் கத்தியால் குத்தப்பட்டாா். இதனால் பலத்த காயமடைந்த அவா், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து குமரவேல், அவரது மகன்கள் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.