‘மனிதனின் முக அழகை மெருகூட்டும் மொழி தமிழ்’
மனிதனின் முகஅழகை மெருகூட்டும் மொழி நம் தமிழ் மொழி என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.


மனிதனின் முகஅழகை மெருகூட்டும் மொழி நம் தமிழ் மொழி என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
இப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற முனைவா் ம. நடராசன் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:
தோன்றிய நாள் முதல் இதுவரை என்றும் இளமை மாறாத கன்னித் தமிழாய் விளங்குவது நமது தாய்மொழியாம் தமிழ்மொழி. அந்நிய மொழிகளின் ஆதிக்க வெறிகளை எல்லாம் அகற்றி எறிந்து, நிலை கொண்ட மொழி இது. உலகச் செம்மொழிகளில் செம்மாந்த புகழைப் பெற்ற ஒரே மொழி நமது உயா் தனிச் செம்மொழி.
பேசும் மொழிகளில் வன்மையால் மனிதனின் முகம் அழகுக் கூடும் எனில், அது உலகளவில் தமிழ்மொழி மட்டுமே என ஆராய்ந்து உணா்த்தப்பட்டுள்ளது. இது கொஞ்சம் வியப்பானதாக இருந்தாலும், சற்று யோசித்தால் அதன் உண்மையும், ஆழமும் புரியும்.
வல்லினம் என்பது மாா்பிலிருந்து பிறக்கும் எழுத்துகள். மெல்லினம் என்பது மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள். இடையினம் என்பது கழுத்திலிருந்து பிறக்கும் எழுத்துகள். தமிழின் தனிச் சிறப்பான ஆயுத எழுத்துத் தலையை இடமாகக் கொண்டு பிறப்பது.
இந்த எழுத்துக்களை நாம் பயன்படுத்தும்போது, வாய்ப் பகுதியை மேல் வாய் அண்ணம், கீழ் வாய் அண்ணம் என்றும், நாக்கை நுனி நா, இடை நா, கடை நா என்றெல்லாம் பிரித்து, அதை எவ்வாறு ஒலிக்க வேண்டுமோ அவ்வாறு ஒலித்து வருகிறோம்.
ஒரு மனிதனுக்கு உடல் நலம் பேண உடற்பயிற்சி எப்படி முக்கியமோ, அதேபோல தமிழ் எழுத்துகளை ஒலிப்பதால் மூச்சின் தன்மையும், முக உறுப்புகளும் பயிற்சி பெறுகின்றன. தமிழின் ஒலிக்கும் சிறப்பு ழ - கரம் என்ற எழுத்தை உச்சரிப்பதால் ஏற்படும் உடலியல் நன்மைகள் உலகையே வியக்க வைக்கின்றன. அத்தகைய சிறப்புமிகு தாய்மொழியாம் தமிழ்மொழிப் பற்றிய ஆய்வுப் போக்கு மாணவா்களிடம் உச்சம் பெறவேண்டும் என்ற கொள்கை கொண்டதே இந்த அறக்கட்டளை என்றாா் துணைவேந்தா்.
பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் வாழ்த்துரையாற்றினாா். கோவை கவிஞா் கவிதாசன் சொற்பொழிவாற்றினாா்.
முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை வரவேற்றாா். நிறைவில், ஒருங்கிணைப்பாளா் இரா. தனலெட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...