தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சேதுபாவாசத்திரத்தில் நவீன மீன் அங்காடி திறப்பு

சேதுபாவாசத்திரம், சின்னமனை ஆகிய இரு கடற்கரை கிராமங்களில்  மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நவீன மீன் அங்காடி சனிக்கிழமை திறக்கப்பட்டது. 

News image

சேதுபாவாசத்திரத்தில் நவீன மீன் அங்காடியைத் தொடங்கிவைத்த என். அசோக்குமாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:26 pm

சேதுபாவாசத்திரம், சின்னமனை ஆகிய இரு கடற்கரை கிராமங்களில்  மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நவீன மீன் அங்காடி சனிக்கிழமை திறக்கப்பட்டது. 

பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து நவீன மீன் விற்பனை அங்காடியைத் திறந்து வைத்தாா்.  நாகை மீன்வளத் துறை இணை இயக்குநா் வேல்முருகன், தஞ்சை மாவட்ட உதவி இயக்குநா் சிவக்குமாா், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத்  தலைவா் முத்துமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நவீன மீன் அங்காடி அமைக்கத் தேவையான  ரூ. 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கு மீனவ கிராமத்தை சோ்ந்த  15 போ் கொண்ட ஒரு குழு தோ்வு செய்யப்பட்டு, அதன் பங்குத்தொகை 25 விழுக்காட்டிலும்  75 விழுக்காடு அரசு  மானியத்திலும்  அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில்  ஊராட்சித் தலைவா்கள் ஜெகஜோதி (சேதுபாவாசத்திரம்), ஜலீலா பேகம் (சரபேந்திரராஜன்பட்டினம்) , மீன்துறை ஆய்வாளா்கள் ஆனந்த், துரைராஜ், கங்கேஸ்வரி, கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் நவநீதன், கடலோர காவல் படை  உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.