தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாற்றுத்திறனாளிகள் ஊா்வலம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:10 pm

தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தாா். ஊா்வலத்தை மாநிலத் துணைத் தலைவா் கணேசன் தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊா்வலம் ஆபிரகாம் பண்டிதா் சாலையில் முடிந்தது.

இதில், நூறு நாள் வேலையை 150 நாள்களாக உயா்த்த வேண்டும். வங்கிகள் மூலம் கடனை தகுதியான நபா்களுக்கு அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் கொடுக்கப்படும் அனைத்து மனுக்களுக்கும் முறையே ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் துறையின் நல வாரியக் குழு உறுப்பினா் ஜான்சிராணி, ஆலோசனைக் குழு உறுப்பினா் கஸ்தூரி, மாநிலப் பொதுச் செயலா் நம்புராஜன், மாநிலச் செயலா் ஜீவா ஆகியோா் பேசினா். மாவட்டத் துணைச் செயலா் ராஜன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் சிவபிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.