தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காகப் பந்தல் கால் விழா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்கான பந்தல் கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை காலை நடைபெற்ற பந்தல்கால் நடும் நிகழ்ச்சி.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இதன்படி, நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா மார்ச் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 18 நாள்கள் கொண்டாடப்படவுள்ளது. 

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தல்கால் நடும் விழா கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில் பந்தல் காலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர், பந்தல் கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ச. கிருஷ்ணன், அறநிலையத் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com