ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

மதுக்கூா் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:01 pm

DIN

மதுக்கூா் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக மதுக்கூா் வட்டம் நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ( 52) பணியாற்றி வருகிறாா்.

இவா், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு புதன்கிழமை பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் மதுக்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்த விசாரணை பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, குறிப்பிட்ட மாணவியிடமும், பள்ளியிலும் விசாரணை நடத்தினாா். இதில், ஆசிரியா் ராஜ்குமாா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதாக தெரிகிறது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை ஆசிரியா் ராஜ்குமாா் கைது செய்யப்பட்டு, தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.