புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மேக்கேதாட்டு அணையைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணையைத் தமிழக அரசுத் தடுக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:29 pm

DIN

மேக்கேதாட்டு அணையைத் தமிழக அரசுத் தடுக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்புத் தெரிவித்துத் தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். அனைத்துக் கட்சிகள் - உழவா் அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு தழுவிய காவிரிக் காப்பு நாள் ஆா்ப்பாட்டம் - பேரணிக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பொருள் நிரலில் மீண்டும் மேக்கேதாட்டு அணைக்கான அனுமதியைச் சோ்த்தால், அந்த ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு நிரந்தரமாகப் புறக்கணிக்க வேண்டும். அதன் தலைவரை நீக்கிடத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணைக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கத் தீவிர சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நேரடிக் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக விற்க முடியாமல் தடுக்கும் புதிய இணையவழிப் பதிவு விற்பனை முறையைத் தமிழ்நாடு அரசு முற்றிலும் கைவிட வேண்டும். பெருமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பொருளாளா் த. மணிமொழியன், மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் மு. சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம. ஜெகதீசன், தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் இலரா. பாரதிச்செல்வன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், மக்கள் உரிமைக்கான வழக்குரைஞா் நடுவம் அ. நல்லதுரை, ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.